அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நான்கு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்தவர் விளக்கமறியலில்

பொ கவந்தலாப் பிரதேச தோட்டமொன்றில் நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கருதப்படுகின்ற சந்தேக நபரொருவரை பொகவந்தலாவை பொலிஸார் இன்று ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


நேற்று மாலை பொகவந்தலாவை கொட்டியாக்கலைத் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவன் அதே தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை மறைவிடமொன்றுக்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முற்சித்துள்ளார்.
இவ்வேளை சிறுமி கூக்குரலிடவே பொதுமக்கள் குறிப்பிட்ட இளைஞனைப் பிடித்து பொகவந்தலாவைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டச் சிறுமி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று முதலாம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG