பிரசித்திபெற்ற தொண்டமனாறு செல்லச்சந்நிதி தேவஸ்தானத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று மாலை விஜயம்செய்து வழிபாடுகளில் பங்குகொண்டதுடன் உற்சவகால ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தேவஸ்தான கொடியேற்றம் இடம்பெற்று இன்றையதினம் ஏழாம் நாள் பெருவிழா இடம்பெறும் நிலையில் அங்கு சென்ற அமைச்சரவர்களை தேவஸ்தான பரிபாலனச் சபைத்தலைவர் சிவசண்முக ஐயர் தலைமையிலான அறங்காவலர்கள் வரவேற்றதுடன் தமது தேவைகளையும் கோரிக்கைகளையும் தெரியப்படுத்தினார்கள். மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மகேஸ்வரி நிதியமூடாக தேவஸ்தான உற்சவத்திற்கென வழங்கிய சுமார் 75 லோட் மணலுக்காகவும் நிர்வாகத்தினதும் அடியவர்களினதும் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி வடமராட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் ஆகியோரும் உடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





































0 கருத்துகள்:
கருத்துரையிடுக