மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு வெற்றிலை இலைக்குள் மறைத்து வைத்து ஒன்பது கிராம் கஞ்சாவை பரிமாற்ற முயற்சித்த சிறைச்சாலை அதிகாரியொருவர் சக அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது நேற்று மாலை விசேட குழுவொன்றால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரின் நடத்தை மற்றும் செயற்பாடு குறித்து சந்தேகம் அவரின் சக அதிகாரிகள் தெரிவித்ததற்கிணங்க கைது செய்யப்பட்ட போதும் கஞ்சாவுடனேயே இருந்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரியை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அண்மைக் காலத்தில் சிறைச்சாலை ஒன்றுக்குள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைபொருள் விநியோகம் செய்தமை முதற்தடவையாகும்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக