அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

குற்றப்புலனாய்வு பிரிவினர் எனக்கூறி தமிழர்களிடம் கொள்ளையிட்டவர்கள் கைது

யிலில் பயணம் செய்யும் தமிழ் மக்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு பணம் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுவந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
.இச்சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து, ரயிலில் பயணம் செய்யும் தமிழர்களை தெரிவு செய்து அவர்களிடம் பணம் நகைகளை கொள்ளையிட்டு வந்துள்ளனர். பல விசேட பொhலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
வேயாங்கொடை மற்றும் கட்டானை ஆகிய இடங்களில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்காவெல, மீரிகம, வெயாங்கொடை, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இச்சந்தேக நபர்கள் இக்கொள்ளைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG