வடக்கில் இயங்கி வந்த இரண்டு கப்பம் கோரும் குழுக்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வர்த்தகர்கள் உள்ளிட்ட செல்வந்தர்களிடம் குறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பெருந்தொகை பணத்தை கப்பமாக பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகர்களையும், செல்வந்தர்களையும் கடத்திச் சென்று பாதுகாப்பு படையினர் கப்பம் பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், இந்தக் கப்பம் கோரும் சம்பவங்களை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
வவுனியா பிரதேசத்தில் இயங்கி வந்த இரண்டு கப்பம் கோரும் கும்பல்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு கப்பம் கோரும் கும்பலைச் சேர்ந்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும், பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பில் அண்மையில் வவுனியா மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரண்டு கும்பல்களும் பெருந்தொகைப் பணத்தை செல்வந்தர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக