ஹம்பாந்தோட்டை கடலில் மூழ்கி கடந்த சனிக்கிழமை காணாமல் போன மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரின் சடலத்தை கடற்படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.
ஹற்றன் எபொஸ்ட்லி தோட்டத்தின் மாஸ்க் பிரிவைச் சேர்ந்த பழனியாண்டி கவிக்குமார் (வயது 23) என்ற இளைஞரே மரணமாகியுள்ளார்.
ஹம்பாந்தோட்டைக்கு சுற்றுப்பிரயாணம் ஒன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சென்ற இந்த இளைஞர் துறைமுகத்துக்கு அருகாமையிலுள்ள கல்மேடொன்றில் இருந்தவேளை அலையினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
இளைஞரது சடலம் இன்று ஹற்றனுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் சற்றுமுன்னர் தெரிவித்தார். இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக