அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நவோமி சாட்சியத்துக்கு முரணான தகவல்

முன்னாள் லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லர், அவர்கள் மீதான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில், சாட்சியமளித்த இரண்டு பேர், மாடல் அழகி நவோமி கேம்ப்பெல், ரத்த வைரங்கள் குறித்து அளித்த சாட்சியத்துக்கு எதிராக சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.


தனக்கு யார் இந்த வைரங்களை தந்தது என்று தெரியாது என்று நவோமி கேம்பெல் கூறியிருந்தார்.
ஆனால் அவரது முன்னாள் ஏஜெண்டான, கரோல் வொய்ட், சாட்சியமளிக்கையில், 1997ம் ஆண்டில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில், அவருக்கு இந்த வைரங்களைத் தருவதாக சார்லஸ் டெய்லர் உறுதியளித்தார் என்று கூறினார்.
முன்னதாக சாட்சியமளித்த ஹாலிவுட் நடிகை, மியா பாரோ, நடு இரவில் வந்த இரண்டு பேர், டெய்லர் சார்பாக அவரிடம் ஒரு பெரிய வைரக்கல்லை தந்ததாக தன்னிடம் கேம்பெல் கூறியதாகக் கூறினார்.
இந்த சட்டவிரோதமாக வாங்கப்பட்ட, போர்க்களத்திலிருந்து பெறப்பட்ட வைரங்களை, முன்னாள் லைபீரியத் தலைவருடன் தொடர்பு படுத்துவதுதான் குற்றம் சாட்டும் தரப்பின் வழக்குக்கு பலம் சேர்க்கும் விஷயமாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG