அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

இலங்கையர் பயணிக்கும் 'சன் சீ கப்பல்' : கனடா தீவிர கவனம்

லங்கையர்கள் 231 பேருடன் கனடாவை நோக்கி 'எம்.வி.சன் சீ' எனும் கப்பல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்துத் தாம் தீவிர கவனம் செலுத்துவதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.


நேற்று டொரண்டோவில் பொருளாதாரக் கழக வைபவம் ஒன்று இடம்பெற்றது. வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கப்பலை பல வாரங்களாகக் கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இக்கப்பல் ஆட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான நடவடிக்கை விபரங்கள் குறித்துத் தாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கப்பலில் யார் இருக்கிறார்கள், ஏன் அவர்கள் கனடாவுக்கு வருகிறார்கள் என்பது குறித்து மட்டுமே தாம் கவனம் செலுத்துவதாகவும் விக் டோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG