17வயதான யுவதியொருவர், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படக்கூடிய நிலையை எதிர்நோக்குகிறார். ரிப்கா பாரி எனும் இந்த யுவதி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான தீர்ப்பு ஒஹையோ மாநில நீதிமன்றமொன்றினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
ரிப்கா பாரி அமெரிக்காவில் தங்குவதற்கு தனக்கு விசேட அனுமதி வேண்டுமெனக் கோரியுள்ளார். அவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த யுவதி முஸ்லிமாகவிருந்து கிறிஸ்தவ சமயத்திற்கு மாறியவர். கடந்த வருடம் மதம் மாறிய பின்னர், அவர் ஒஹையோ மாநிலத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து வெளியேறி பஸ் ஒன்றின் மூலம் ஒஹையோ மாநிலத்திற்குச் சென்றதன் மூலம் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
இஸ்லாமிய மதத்தை கைவிட்டதால் தான் கொலை செய்யப்படலாம் என அஞ்சியதாக அவர் வாதாடினார்.
அவரை மீண்டும் ஒஹையோ மாநிலத்திலுள்ள பெற்றோரிடம் திருப்பி அனுப்ப வேண்டுமா என்பது குறித்து ஒர்லாண்டோ நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு நீதிபதி ஒருவர் மறுத்தார். அது தனது நியாயாதிக்கத்திற்குட்பட்ட விடயமல்ல என நீதிபதி கூறினார்.
எனினும் பின்னர் அவர் ஒஹையோவுக்கு அனுப்பப்பட்டு கிறிஸ்தவ மத போதகர் குடும்பமொன்றுடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
அவரின் பெற்றோரின் குடியுரிமை நிலை தெரியவில்லை. இந்த யுவதிக்கு அடுத்த மாதம் 18 வயது பூர்த்தியடையவுள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக