அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 ஜூலை, 2010

மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு கஞ்சா எடுத்து வந்த சிப்பாய் பொலிஸாரால் கைது!

மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு கஞ்சாப் பைக்கற்றுகளுடன் சென்றுகொண் டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரை அநு ராதபுரம் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர்.
இந்த சந்தேகநபர் மாத்தறையில் இருந்து அநுராதபுரம் சென்று, அங்கிருந்து யாழ்ப் பாணத்துக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண் டிருந்த போது அநுராதபுரம் நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு குறித்த நபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது பயணப் பையில் இருந்து 1,500 கஞ்சாப் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை இந்த சிப்பாய் மாத்தறைப் பகுதியில் ஒரு பைக்கற் 100 ரூபா வீதம் கொள் வனவு செய்ததாக பொலிஸ் விசாரணை களின் மூலம் தெரியவந்துள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG