அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

நாளை தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை; பிள்ளையான் கலந்துகொள்ளவாரா?

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நாளை நடைபெறவுள்ளது.

எனினும், இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ளமாட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் எமது  இணையதளத்திற்கு தெரிவித்தன.
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா கலந்து கொள்வார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்புக்கான பிரதான காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ள முடியாமையே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையதளத்திற்கு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

BATTICALOA SONG