அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

மட்டக்களப்பில் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை-கூட்டமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 39,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், 13,777 வீடுகள் முழுவளவிலும் 9,317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஆனால், இதுவரையில் 1377 வீடுகள் மாத்திரமே கட்டிக்கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நிவாரணக் கொடுப்பனவான 25,000 ரூபா ஆறாயிரம் பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருப்பதாகவும் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG