அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

அ.புரத்தில் தற்கொலை குண்டுதாரி; போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய நபரொருவர் கைது

தற்கொலை குண்டுதாரிகள் 12பேர் அநுராதபுரத்தில் நடமாடுவதாக தனது மனைவியை பயமுறுத்துவதற்காக அவருக்கு போலியான எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் அனுப்பிய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்களுக்காக மதவாச்சியிலிருந்து அநுராதபுரத்துக்கு தனது மனைவி பயணித்திருந்த நிலையிலேயே குறித்த நபர் மேற்படி எஸ்.எம்.எஸினை அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் உட்பட ஆறு பேரைக் கைது செய்து தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதான மேலும் நால்வருக்கு வலைவிரித்துள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG