களுத்துறை நாகொட வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அங்கிருந்த மருந்துகள் யாவும் அழிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி கூறினார்.
களுத்துறை நகர சபை தீயணைப்புப் படையின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. களஞ்சியசாலையிலிருந்த மருந்துகள் யாவும் அழிந்துள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கும் அவர் மின் கசிவே விபத்துக்கு காரணமென சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விபத்தினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து இதுவரை கணிப்பிடப்படவில்லை.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 15 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக