அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 31 ஜூலை, 2010

ஊடக அலுவலகத்தை தாக்கிய கும்பல் தப்பிச்சென்றது எப்படி? ஜே.வி.பி. கேள்வி

உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள ஊடக நிறுவனமொன்றின் மீது 12 பேர் கொண்ட கும்பலொன்று வாகனத்தில் வந்து தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்தது எப்படி என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று அதிகாலை தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட, வெற்றி எவ்.எம்.,சியத்த எவ்.எம்., ரியல் எவ்.எம். ஆகிய வானொலிகளின் அலுவலகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


ஆயுதந்தாங்கிய 12 பேர் கும்பலொன்று வாகனத்தில் வந்து பாரிய தாக்குதலொன்றை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது. இந்த இடத்திற்கு சில நூறு மீற்றருக்குள்தான் ஜனாதிபதியின் வாசஸ்தலுமும் உள்ளது. இத்தகைய உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்ல முடிந்தது எப்படி என நாம் கேள்வி எழுப்புகிறோம்.
ஊடகங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக மௌனமாக இருந்தது போதும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒற்றிணைந்து செயற்பட வேண்டும்.
தாக்குதல் நடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை. ஆனாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாரிடம் கோருகிறோம் என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG