அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவை அமுல்படுத்தத் தவறியதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்தன தொடுத்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




சட்டத்தரணி கௌரி சங்கரி தவராஜாவுக்கூடாக மேற்படி பொலிஸ் அத்தியட்சகர் சமர்ப்பித்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை உத்தரவை தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு உயர்நீதிமன்றம் மே மாதம் 25 ஆம் திகதி உத்தரவிட்டபோதிலும் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவித்தல்களை விடுக்கவில்லை எனவும் தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் சீருடைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை பொலிஸ் மா அதிபர் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதாகவும் இதன்மூலம் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள்:

krish சொன்னது…

உங்கள் போராடம் முடிந்ததுக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்மந்தம் ,அப்படியானால் இப்ப உங்கள் போராடத்தை தொடரலாமே , இப்பொழுது தமிழ் மக்கள் நல்ல முரயில்ல்தான் நடத்தபடுகிரர்களா ?? இப தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கலாமே ,மேலும் உங்கள் blogger இன் templete i மாற்றுங்கள் load ஆகி முடியவே அர மணித்தியாலம் ஆகிறது,

jkr சொன்னது…

@krishகடந்த 11 ஜுலை, 2010 அன்றைய பி பி சி தமிழோசையில் எமது கிழுக்கு மாகாண வாகரைப் பிரதேசத்திலுள்ள அரசாங்க முந்திரி பண்ணைக்குரிய 1200 ஏக்கர் காணி கடற்படை முகாமொன்று அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கூறுகின்றார்
இது தொடர்பாக தனது ஆட்சேபணை எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை மீண்டும் எமது மண் அபகரிக்கப்படுவதும் என் தமிழ் தாய்மார்கள் –சகோதரிகள்
மானபங்கப் படுத்தப் படுவது
இவைகள் அனைத்தும் எமது போராட்டத்தின் தொடக்க புள்ளிக்கு எம்மை இட்டு செல்கின்றது எதற்க்காக எமது வாழ்வை அர்பணித்து ஆயுதம் எடுத்தோமோ அவைகள் மீண்டு நடக்கையில் இந்த தமிழ் அமைச்சர்களும் அமைச்சுக்களும் எதற்கு? எமது ஆயுதப் போராட்டம் தற்போது மௌனிக்கப்பட்டாலும் மீண்டு தொடராமல் இருக்க அரசும் அமைச்சர்களும் முயற்சி எடுக்க வேண்டும் நிச்சயமாக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்போம் நண்பா

BATTICALOA SONG