அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010

பவாரின் 'பவர்' குறைகிறது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நாடு திரும்பியுள்ள இந்திய மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் தனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



விலைவாசி உயர்வுப் பிரச்சினை, ஐபிஎல் விவகாரம் என பல பிரச்சினைகளால் துவண்டுபோயிருந்த பவாருக்கு காங்கிரஸ் மட்டத்திலும் நன்மதிப்பு குறைந்தே காணப்பட்டது.
இருப்பினும் ஆட்சி நீடிக்க பவார் அவசியம் என்பதால் பவாரை விட்டு வைத்திருந்தது காங்கிரஸ். இனியும் பவாருக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்ற புகைச்சல் காங்கிரஸுக்குள் அதிகரித்து வந்த நிலையில் சமீபத்தில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார் பவார். அதன் பின்னர் நாடுதிரும்பியுள்ள பவார், பிரதமரை சந்தித்து தனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு கோரியுள்ளார்.
இதுகுறித்து பவார் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாகவே எனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு பிரதமரிடம் கூறி வருகிறேன். இன்று பிரதமரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன். கட்சிக்காகவும், ஐசிசிக்காகவும் நான் நிறைய நேரத்தை செலவிட வேண்டியுள்ளதால் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
பவார் வசம் தற்போது உள்ள உணவு, பொது விநியோகம், நுகர்வோர் நலம் ஆகிய துறைகளை வேறு அமைச்சருக்கு மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. பவார் விவசாயத்துறையை மட்டும் தன்வசம் தொடர்ந்து வைத்திருப்பார்.
பவாரிடமிருந்து பறிக்கப்படும் துறைகளை காங்கிரஸ் அமைச்சர்களிடம் பிரதமர் ஒப்படைப்பதன் மூலம் பவாரின் ஆதிக்கத்தையும் குறைக்க முடியும் எனவும் காங்கிரஸ் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG