பெண்ணிடம் மச்சம் பார்க்கவேண்டும் எனக்கூறி, தகாதமுறையில், நடந்த தலையாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியை அடுத்துள்ள சேந்திமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமலட்சுமி(22). இவர் ரேஷன்கார்டில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்காக, அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்றிருந்தார். பணியில் இருந்த தலையாரி சூர்யதேவன்(36) என்பவர், அந்த பெண்ணின் பெயர், முகவரியை விசாரித்தார். அங்க அடையாளங்களை குறிப்பதற்காக மச்சம் இருக்கிறதா என கேட்டு, சேலையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடக்க முயன்றாராம். இதனால் ஆத்திரமடைந்த ராமலட்சுமியின் உறவினர்கள், சேந்திமங்கலம் பொதுமக்கள் தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையாரி மீது,பெண் கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 29 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக