ருகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும்படியான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் போது நுகேகொடையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.
“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 4 பேரும் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ளனர். நாம் இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம். இது எமது கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக