மூதூர் பிரதேசத்தில் 2007ஆம் வருடம் 16 வயதுசிறுமி ஒருவரை பலாத்தகாரம் செய்த வகையில் சந்தேக நபருக்கு 10 வருடம் கடூழியச் சிறைத்தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டசிறுமிக்கு 50,000 ரூபா நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருக்கோணமலை மேல்நீதிமன்றில் இன்று நீதிபதி எஸ்.தியாகேந்தரன் இத் திருப்பினை வழங்கியுள்ளார்.
அபராத பணத்தை செளுத்த தவறும் பட்சத்தில் மேலும் 1 மாத காலம் கடூழியச்சிறை விதிக்கப்படும். சிறுமிக்கு நட்டஈடு வழங்கத் தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத காலம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேசத்தில் இச்சம்பவம் 2007அம் வருடம் யூ+லை மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன் பின் நடந்திருக்கலாம் என வழங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 30 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக