தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்றயில் பேச்சுவார்த்தை ஒன்றில் நான் ஈடுபட்டேன். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேச்சு நடத்தினார் என்று வெளிவந்த தகவல்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்மந்தனை அண்மையில் நான் சந்தித்து பேச்சு நடத்தினேன். இந்த சந்திப்பு உத்தியோகபற்றற்ற முறையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை என்று கூறலாம். காரணம் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். விரைவில் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 2 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக