அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 5 ஜூன், 2010

எண்ணெய்க்கசிவு-புதிய நம்பிக்கை

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஆழ்கடல் எண்ணெய்க் கிணற்றிலிருந்து எண்ணெய்க் கசிய ஆரம்பித்து ஆறு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதை கட்டுப்படுத்துவதில் இன்று சிறு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கசியும் எண்ணெயில் சிறிதளவை உறிஞ்சி மேலே நிற்கும் கப்பலில் கொண்டு போய் சேர்ப்பதில் பொறியியலாளர்கள் தற்போது வெற்றிகண்டுள்ளனர்.
எண்ணெய்க் கசியும் இடத்தில் பிபி நிறுவனம் புதிதாக பொருத்தியுள்ள மூடியின் வழியாக கசியும் எண்ணெயில் ஒரு நாளைக்கு ஆயிரம் பீப்பாய்கள் அளவிலான எண்ணெயை உறிஞ்சி கடலில் கலக்கவிடாமல் தடுக்க முடிகிறது.
இருந்தபோதிலும் உடைப்பெடுத்த இடத்திலிருந்து பீறிட்டு கடலில் கலக்கும் எண்ணெயில் ஒரு சிறிய பங்குதான் இது.
ஆனால் இந்த வழியில் முன்னேற்றம் கண்டு சிறிது காலத்தில் கடலில் கணக்கும் எண்ணெயில் பெருமளவை உறிஞ்சி மேலே நிற்கினற எண்ணெய் தாங்கிக் கப்பல்களில் கொண்டு சேர்த்துவிட முடியும் என பிபி நிறுவனத்தார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG