அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 4 ஜூன், 2010

கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள் புனரமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள் புனரமைப்புப் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களைச் சந்தித்துத் தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள் புனரமைப்புப் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களைச் சந்தித்துத் தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பரந்தனில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கரைச்சி வடக்கு (பரந்தன்) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் திரு செல்வராஜா கரைச்சிப் பிரதேச விசேட ஆணையாளர் திரு. பொன். நித்தியானந்தம் கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் பொதுமுகாமையாளர் திரு. கணேசபிள்ளை உட்பட பிரதேச ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள் கடற்றொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரைச்சி வடக்கு - சுண்டிக்குளம் கடலேரியில் கடற்றொழில் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்தமைக்காக முருகேசு சந்திரகுமார் அவர்களைப் பாராட்டியதுடன் சமாசத்தின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பொன். நித்தியானந்தம் அவர்கள் கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளைப் பற்றியும் சங்கத்தின் தேவைகள் குறித்தும் சந்திரகுமார் அவர்களிடம் எடுத்துரைத்ததுடன் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர்  கூடிய விரைவில் சங்கத்தின் வாகனங்களை மீட்டுத்தரும்படியும் புதிய வாகனங்களைப் பெறுவதற்கு கடனுதவிக்கு ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சங்கக் கிளைகள் ஆரம்பிப்பதற்கான கட்டட வசதிகள் இல்லாமலிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
இவர்களது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த சந்திரகுமார் அவர்கள் கூட்டுறவு அமைச்சர் வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர் படை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதாகத் தெரிவித்தார். இதேவேளை வன்னி தொழில் நுட்பக் கல்லூரியின் இணைப்பாளர் அவர்கள் மீண்டும் தொழில் நுட்பக் கல்லூரியை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடினார்.

தொழில்நுட்பக் கல்லூரியை மீள இயங்குவதற்குத் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொண்டு பெறுவதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்த பிரதித் தலைவர் சந்திரகுமார் புதிய  அமைவிடமொன்றுக்கான காணி தொடர்பாக கண்டறிவதாகவும் கூறினார்.

பிரதேச பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை போன்றவை தொடர்பாகவும் பரந்தன் பிரதேச மக்கள் தமது தேவைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் விரைவில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை முதற்கட்டமாகத் தீர்ப்பதாகவும் ஏனையவற்றை கட்டம் கட்டமாக தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

ஆனால் மக்களின் பங்கேற்பும் ஒத்துழைப்பும்தான் மீள் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் என்றும் தெரிவித்தார்.









 

0 கருத்துகள்:

BATTICALOA SONG