அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

ஒன்பது வயது சிறுமி ஆண் குழந்தை : அதிர்ச்சியில் மருத்துவர்கள்

மலேசியாவில் ஒழுக்க நெறி குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பினாங்கில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி பிள்ளையை ஈன்றெடுத்துள்ளார் என்பது பொது மக்களை மட்டுமல்ல, மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூன்றாவது வகுப்பில் படிக்கும் அந்த சிறுமி தன்னுடைய 14 வயது தோழனினிடம் ஏற்பட்ட தொடர்பின் மூலமாக அழகான ஆண்குழந்தை ஒன்றை பெற்று எடுத்துள்ளார்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மாநில சுகாதார சமூக நலன் குழுத்தலைவர் பீ பூன் போ இந்த செய்தி, தமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கும் காவல்துறைக்குக்கும் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அலுவலக அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வயது குறைந்த பெண்ணுடன் உடலுறவு கொள்வது என்பது சட்டப்படி கற்பழிப்பு குற்றமாகும் என அவர் கூறினார்.
மேலும் இந்த சின்னஞ் சிறு சிறுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், மாநில சுகாதார இலாகாவுக்கு உடனடியாக விபரங்களை தரவேண்டும். இல்லை என்றால் உண்மையை மறைத்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கக்கூடும் என அவர் சொன்னார்.
இது சம்பந்தமாக இதுவரை எந்தப் புகாரும் தமக்கு வரவில்லை என்று பினாங்கு காவல்துறை துணை ஆணையர் டத்தோ ஹிசான் துன் ஹம்சா தெரிவித்தார்.
இந்தச் சிறுமி சிதறிப்போன ஒரு சீனக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவித்துள்ளார் என்றும் சீன நாளிதழ் ஒன்றில் செய்தி வந்திருக்கிறது. இந்த சிறுமி மற்ற சிறுமிகளை விட சற்று பருமனான உடலமைப்பு கொண்டவர் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG