நயினையில் நேற்றிரவு வரை கூடிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின் "அரோகரா' கோஷங்கள் ஓங்கி ஒலிக்க வண்ண, வண்ண மின்விளக்குகள் ஜொலிக்க அழகிய சப்பறத்தில் அம்பாள் வீதி வலம் வந்து அருள்காட்சி அளித்தார்.
நேற்று நண்பகலில் இருந்து குறிகாட்டுவானில் இருந்து படகுகள் மூலம் பக்தர் கள் அணி, அணியாக வந்து நயினை யம் பதியில் குவியத் தொடங்கினர்.
இதேவேளை,
நேற்று இரவு 8 மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று 10 மணிக்கு அம்பாள் திருவீதியுலா வந்த காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்கு திரண்டிருந்த அடியார்கள் அரோகரா கோஷம் எழுப்பி பக்திப் பரவசத்துடன் நயினை அம்மனைத் தரிசித்தனர். வழமைபோல் அமுதசுரபி அன்னதான சபையினர் அடியார்களுக்கு சளைக்காமல் உணவுகளை வழங்கி உபசரித்தர்.
நேற்று நள்ளிரவுவரையிலும் பக் தர்கள் ஆலயத்தை நோக்கி வந்த வண் ணம் இருந்தனர் என்று அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
ஆலயத்தில் கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய் யப்பட்டிருந்தன. நள்ளிரவு வரை சேவை யில் ஈடுபட்ட படகுகளுக்கு கடற்படை யினர் பாதுகாப்பு வழங்கினர். ஆலயச் சூழலில் பொலிஸார் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
ஆலயத்தின் உள்பிரகாரத்தில் நடை பெறும் நிகழ்வுகளை பக்தர்கள் கண்டுக ளிக்க தொலைக்காட்சிகள் பல இடங்க ளிலும் பொருத்தப்பட்டிருந்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக