அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

தயா கமகே நியமனம் : முஸ்லிம் காங்கிரஸை ஐ.தே.க ஏமாற்றியதா?

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியால் நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக எதுவும் தெரியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சற்று முன் எமது  இணையதளத்திற்கு தெரிவித்தார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என நான் நினைக்கின்றேன் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி .
மேலும், இது சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி எவ்வித பேச்சுவார்த்தையிலும் முஸ்லிம் காங்கிரஸுடன் ஈடுபடாமல் நியமித்துள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே நியமிக்கப்பட்டமை எமது  இணையத்தளம் தன்னிடம் தொடர்புகொண்டு வினவிய போதே தெரியவந்ததாக ஹசன் அலி குறிப்பிட்டார்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG