அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 20 ஜூன், 2010

பார்வதி அம்மாளை இந்தியா கொண்டுசெல்ல திருமாவளவன் தொடர்புகொள்ளவில்லை- சிவாஜிலிங்கம்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இந்தியா கொண்டு செல்வதற்காக தொல்.திருமாவளவன் தன்னுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எமது  இணையதளத்திடம் சற்று முன் தெரிவித்தார்.

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரபாகரனின் தாயாரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச்செல்வதற்காக சிவாஜிலிங்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார் என இந்திய இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து எமது  இணையதளம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பியது.
இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு செல்ல பார்வதி அம்மாள் விரும்பவில்லை என்றும் கே,சிவாஜிலிங்கம் எமது  இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்.
பார்வதி அம்மாள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG