அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 ஜூன், 2010

சூர்யாவுக்கு அல்வா கொடுக்கும் கார்த்தி!

கோலிவுட்டில் அதிக எண்ணிகையில் உதவி இயக்குனர்கள் வைத்திருக்கும் நான்கு இயக்குனர்கள் ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின்.
இந்த நான்கு பேருமே கதைகளை சிறப்பாக உருவாக்க உதவி இயக்குனர்களை சாறு பிழிந்து கொள்வதில் கில்லாடிகள்.
அதேபோல வாங்கும் வேலைக்கு வஞ்சகம் இல்லாமல் உதவி இயக்குனர்களுக்கு கைநிறைய சம்பளம் கொடுப்பதில் இந்த நான்கு பேரையும் அடித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள்.
இந்த நான்கு இயக்குனர்களும் உதவி இயக்குனர்களை மூன்று குழுவாகப் பிரித்து கதை விவாதத்துக்கு ஒரு குழு, படப்பிடிப்பு தளத்து ஒரு குழு, படத்தின் முன் தயாரிப்பு பின் தயாரிப்புக்கு ஒரு குழு என்று வேலை வாங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இப்போது ஹரியின் கதை விவாத உதவி இயக்குனர்கள் குழு ஒரு கதையை மிகவும் சீரியஸ்ஸாக விவாதித்துகொண்டிருகிறார்களாம்.
அந்தக்கதை டிக்காபியோ நடித்த கேச் மீ. இஃப் யூ கேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அப்படியே சூரியா-கார்த்தி இருவருக்கும் டைலர் மேடாக பிட் பண்ண கடுமையாக உழைத்து வருவதாக இயக்குனர் ஹரியின் அலுவலக வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைக்கிறது.
ஹைடெக் திருட்டு தொழில் செய்யும் இளைஞனாக கார்த்தியும் அவரை டிரேஸ் செய்து பிடித்து பிறகு தப்பவைக்கும் சிபிஐ போலீஸாக சூரியாவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைக்கிறது. சிங்கம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தை சன் பிக்ஸர் தயாரிக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் கிடைக்கிறது. மேலும் தற்போது தனுஷ் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்க இருக்கும் ஹரி.
அந்தப் படத்தை முடித்ததும் சூரியா கார்த்தி இணையும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வருகிறது. ஆனால் கார்த்தி குறிப்பிட்டது போல ஹரி படத்தில் அவர் வில்லன் இல்லை என்கிறார்கள் உதவி இயக்குனர் வட்டாரத்தில். எப்படியோ கார்த்தி விளையாட்டாகச் சொன்னது நிஜமாகிவிட்டது!

0 கருத்துகள்:

BATTICALOA SONG