யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றங் கள் வழங்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நீதிவானாகப் பணியாற் றும் ரி.ஜே. பிரபாகரன் அக்கரைப்பற்று நீதி மன்றத்துக்கும், வவுனியா நீதிவானாகப் பணியாற்றும் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானாக எஸ். அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீதிவான் ரி.ஜே. பிரபாகரன் முன் விசாரணை செய்யப்பட்டு வருவது தெரிந்ததே.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக