அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 22 ஜூன், 2010

இசை நிகழ்ச்சியில் மது போதையில் நடனம்; பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் பணி நீக்கம்

இசை நிகழ்ச்சியொன்றின் பாதுகாப்புக்காகச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் தமது சீருடைகளைக் களைந்து நடனமாடிய குற்றச்சாட்டுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமொன்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இவர்கள் மூவரும் மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் கைது செய்துள்ளதுடன் மேலிட உத்தரவுக்கமைய பணி நீக்கம் செய்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG