அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 ஜூன், 2010

பாடகர் இராஜ் சென்னை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை? _

இலங்கையின் பிரபல பாடகர்களில் ஒருவரான இராஜ் சென்னை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை துறைமுகத்துக்கு சென்ற இலங்கை பாடகர் இராஜை விமான நிலையத்தில் உள்ள அதிகாரி ஒருவரால் தமிழரா, சிங்களவரா என விசாரிக்கப்பட்டதாகவும், சிங்களவர் என அடையாளப்படுத்திக் கொண்டதன் பின்னர் விமான நிலைய அதிகாரி தம்மை கடுமையாக திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எங்களுடைய நாட்டுக்கு ஏன் வந்தீர்கள் என குறித்த அதிகாரி கேள்வி எழுப்பியதாகவும், இதற் இவர் தான் இங்கு வருவதற்கு உரிமை இல்லையா என்று கேட்டதாகவும் இதன் பின்னர் தன்னிடம் விவாதம் செய்கிறார் என்று அங்குள்ள பல அதிகாரிகளிடம் கூறி தன்னை சுமார் ஆறு மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்தியதாக இராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தென் இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளர் விஜய் அன்டனியுடன் இணைந்து தயாரித்த இசை அல்பத்திற்கு கிடைக்கப் பெற்ற விருதினை பெற்றுக் கொள்வதற்காக தாம் இந்திய சென்று சென்னை விமான நிலையத்தை அடைந்த போதே இவ் விசானை இடம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். _

0 கருத்துகள்:

BATTICALOA SONG