அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி//இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மக்ரூஃப் " ஹெட் - ரிக் " சாதனை


இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், பர்வீஸ் மக்ரூஃப், தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை (ஹெட் -ரிக்) கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.


தம்புளையில் நடபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று களமிறங்கியுள்ளன.
இந்நிலையிலேயே பர்வீஸ் மக்ரூஃப், இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியைச் சேர்ந்த, ரவிந்திர ஜடேஜா, பிரவீன் குமார் மற்றும் ஷஹீர்கான் ஆகியோரே அவரது பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.//இன்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 73 ஒட்டத்தையும் மஹேல ஜெயவர்த்தன ஆட்டமிழக்காமல் 53 ஒட்டத்தையும் பெற்றார்.
இதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பர்வேஸ் மஹ்ரூப் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG