அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 ஜூன், 2010

மாயையை உருவாக்கி அரசியலமைப்புடன் விளையாட வேண்டாம்: அரசுக்கு ஐ.தே.க எச்சரிக்கை

மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக தொடர்ந்தும் பொய்கூறி மாயையை உருவாக்கி அரசியலமைப்புடன் விளையாட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இக்கருத்தினை அங்கு முன்வைத்தார்.
“நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தி தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். மாற்றம் என்ற வார்த்தையைக் கூறி அரசாங்கம் காலம் கடத்துகிறது. ஆனால் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG