அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 ஜூன், 2010

ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி 81 ஒட்டங்களால் வெற்றி

இன்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 81 ஒட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணி சார்பாக தினேஷ் கார்த்திக் 66 ஒட்டத்தை பெற்றார்.இலங்கை அணி சார்பாக கப்புஹேதர ஆட்டமிழக்காமல் 55 ஒட்டத்தை பெற்றார்.
இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG