அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

20 வது தியாகிகள் தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டது..!

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் 20 வது தியாகிகள் தின நிகழ்வுகள் நேற்றையதினம் தாய்லாந்து பாங்கோக்கின் லும்பினி நகரில் நடைபெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்களின் விளக்கேற்றல் நிகழ்வுடன் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தோழர் பத்மநாபா அவர்களின் உருவப்படத்திற்கு மலராஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. 19.06.1990ல் சென்னையில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் தோழர் கே. பத்மநாபா அவர்கள் உள்ளிட்ட தோழர்களின் நினைவாக ஆண்டு தோறும் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG