அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 4 ஜூன், 2010

வங்கதேச தீவிபத்தில் 116 பேர் பலி


 

தீவிபத்தின் மீட்புப்பணிகள்
தீவிபத்தின் மீட்புப்பணிகள்
வங்கதேசத் தலைநகர் தாக்காவில் ஜனநெருக்கடி மிக்கப் பகுதி ஒன்றில் பரவிய பயங்கரத் தீயில் குறைந்தபட்சமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் இந்தத் தீ ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது.
ஒரு கிடங்கில் இருந்த இரசாயனங்கள் தீப்பிடித்தவுடன் பல கட்டிடங்களுக்கும் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று முழுமையாக தீச்சுவாலைகளால் விழுங்கப்பட்டிருந்தது.
தீப்பிடித்த இந்த கட்டிடத்தின் ஜன்னல்கள் இரும்புக் கம்பிகளால் மூடப்பட்டிருந்ததால் அதில் இருந்தவர்கள் தப்பிப்பதற்கான வழிகள் ஏதும் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்னும் தேடி எடுக்கப்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG