கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை நாளை ஆஜர் செய்யவுள்ளதால், புதுக்கடைப் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதாவது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா எனும் சோதனை நடவடிக்கையில் இராணும் ஈடுபட்டிருந்தது.
கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்கால் பகுதியில் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டார் என்று ஜெனரல் சரத் பொன்சேக சன்டே லீடர் பததிரிகைக்கு போட்டி வழங்கியிருந்தார்.இப்போட்டி சம்பந்தமாக மனுவொன்றை இரகசிய பொலீஸார் கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இந்த மனு சம்பந்தமாகவே ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக