அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 மே, 2010

அமிதாப்பச்சன் இலங்கை வருவதில்லையென முடிவு


நாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐப்பா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளார்.
மேலும் ஐப்பா அமைப்பின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளார் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான் இன்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சீமான் கூறியுள்ளதாவது:-
இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு, கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின் இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப்பின் வீட்டுக்கு முன் சில வாரங்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அத்துடன் அமிதாப்பைச் சந்தித்த அவர்கள், 10கோடித் தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும்படி வற்புறுத்தி, நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரிசீலித்த அமிதாப், ஐப்பா விருது வழங்கும் குழுவிலிருந்து விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும் தனது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை ஐப்பா விருது வழங்கும் குழுவானது அமிதாப்பை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது. அமிதாப்புக்கு பதில் நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது. லாரா தத்தா, விவேக் ஓபராய் ஆகியோரும் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG