அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 11 மே, 2010

தமிழ்ச்செல்வனின் குடும்பம் இந்தியாவில் அரசியல் புகலிட கோரிக்கை-கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த முன்னாள் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்கவைக்கட்டிருக்கின்றனர்.
தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாக பராமரித்துவருவதாகவும் எமது  இணையதளத்திற்கு பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும், அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்ல என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார். அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதேவேளை, புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் 1500 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG