அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

தமிழர் தமது பிரதிநித்துவத்தை காப்பாற்ற வாக்களிக்க வேண்டும்- தமிழ் கல்விமான்கள்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும், அரசியல் தீர்வென்பது முள்ளிவாய்க்கால் போருடன் புதைக்கப்பட்டு விட்டதாகவும் தென்னிலங்கை அரசியல் கருத்தியலாகவுள்ளது.
அத்துடன் தமிழ் மக்கள் அரசியல் தீர்வில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தமிழர் பிரதேச அபிவிருத்தியே அவர்களது முற்றுமுழுதான இலக்காக இருக்கின்றது என்றும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச சமூகத்திற்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் மூலம் செய்தியாக தெரிவிக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இது யதார்த்தத்திற்கு புறம்பான கருத்தியல் என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தமிழ் கல்விமான்களும் சமூக ஆர்வலர்களும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் தமது ஒன்றிணைந்த செய்தியை இந்தத் தேர்தல் மூலம் மிகத் தெளிவாக தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்öகாண்டுள்ள அவர்கள் தமிழ் மக்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் நடை öபறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்களிப்பில் கலந்து கொள்வது அவசியமாகும். தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்களும் தமக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுத் தேர்தலில் வாக்காளிக்காமல் தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பார்களேயானால் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். பொதுத் தேர்தல் தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் தமது அரசியல் வரலாற்றில் தற்பொழுதுதான் முறையான, உறுதியான தலைமைத்துவம் இன்றி தளம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடியான நிலையைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அரசியல் அபிலாஷைகளையும் பூண்டோடு அழித்துவிடுவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு செயற் படுத்தப்படுகின்றன.
இத்தகைய சதி முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ பலிக்கடா ஆகக் கூடாது. அதேவேளையில் தமிழ் மக்களுக் கென உறுதியான நாடாளுமன்ற அரசியல் தலைமை த்துவத்தை கட்டியெழுப்பிக் கொள்ள வேண் டிய ஒரு வரலாற்றுக் கடமையை சுமந்தவர்க ளாக உள்ளனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கான ஒரு நாடாளுமன்ற அரசியல் தலைமையை கட்டியெழுப்ப தமிழ் மக்கள் தவறுவார்களே யானால் எதிர்காலத்தில் தமது அரசியல் அபி லாஷைகளை அடைந்துகொள்வது கேள்விக் குறியாக மாறிவிடும். எனவே, நடைபெறவுள்ள பொதுத் தேர்த லில் தமிழ் மக்கள் கட்டாயமாக வாக்களித்து தமக்கான அரசியல் தலைமையை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG