வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஏப்ரல், 2010
இலங்கை கடற்படை, மீனவர்கள் சேர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து கச்சதீவுக்கருகே வைத்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கச்சதீவுக்கருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 500 க்கும் அதிகமான மீன்வரகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடாத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து ஒருவாறு தப்பி வந்த தமிழக மீனவர்கள் மீண்டும் தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகினர். சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து அவர்களின் வலைகளை அறுத்த எறிந்தனர். மீன்களையும் அள்ளிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். இதனால் தமிழக மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறாதாகா அறிய முடிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக