மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வந்து இணை யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் அனைவருக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான மைத்திரி பால சிறிசேனவே இந்த அழைப்பை விடுத்தார்.
அவர் அங்கு இதுதொடர்பில் கூறியவை வருமாறு:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். யுத் தம் முடிவடைந்து, இந்த நாட்டில் மக்கள் பல மாற்றங்களை எதிர்பார்த்தனர். அந்த மாற்றங்களை ஏற்படுத்தவே அவர்கள் இந்த ஆணையை எமக்குத் தந்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காகவே இந்த வெற்றி கிடைத்தது. இந்த யுத்தத்தை எதிர்கொள்வதற்குப் பொருத்த மான தலைவராக அவர் இருந்தார். மக்கள் இப்போது இந்த ஆணையை வழங்கியிருக் கின்றனர்.
இந்த நாட்டை எதிர்காலச் சந்ததியின ருக்காகக் கட்டியெழுப்புவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன் றிணையவேண்டும்.
நாட்டு மக்களின் விருப்பத்தை
நிறைவேற்றுவோம்
தற்போது பல புதியவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நல்லதொரு நிர்வாகத்தை நாம் நடத்திச் செல்வோம். இந்த நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
இந்த கௌரவமான வெற்றியைத்தந்த அனைவருக்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை படுமோசமாகத் தோல்வியடையச் செய்துள்ளனர்.
1978 ஆம் ஆண்டு அக்கட்சியால் வழங்கப்பட்ட அரசமைப்பின் அடிப்படையிலேயே இத்தேர்தல் நடைபெற்றது. இந்த அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின் 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியால் வெற்றிபெற முடிந்தது.
அதனைத் தொடர்ந்து வந்த அனைத்துத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்விகளைத் தழுவி 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்தான் வெற்றிபெற்றது.
2001 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியையே கண்டது. 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் மீண்டெழ முடியாத ஒரு தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. என்றார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 12 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக