அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

நித்யானந்தா செக்ஸ் லீலைகளை திரைப்படமாக்கும் ராம் கோபால் வர்மா!

நித்தியானந்தா சாமியாரின் மோசடிகள் மற்றும் செக்ஸ் முறைகேடுகளைத் திரைப்படமாக்குகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
பாலிவுட்டில் உண்மைச் சம்பவங்களை படமாக்குவதில் பெரும் புகழ் பெற்றவர் ராம்கோபால் வர்மா.

இப்போது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நித்தியானந்தனின் செக்ஸ் லீலைகளை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
படத்துக்கு 'காட் அன்ட் செக்ஸ்' என்று பெயரிட்டுள்ளார். நித்தியானந்தனின் செக்ஸ் லீலைகளோடு ஆன்மீக மோசடிகளும் இந்தப் படத்தின் பிரதான அம்சமாக இருக்குமாம்.
இதுகுறித்து வர்மா கூறுகையில், "ஆசிரமத்தின் உள்ளே நடக்கும் ரகசியங்கள் குறித்த படம் இது. இது செக்ஸ் லீலைகளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, உள்ளே நடக்கும் கோஷ்டிப் பூசல்களாக இருக்கலாம். அவர்களுக்கு எதிராக நடப்போரின் செயல்களை கூறுவதாகவும் இருக்கலாம்.
நித்தியானந்தா விவகாரத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது மனிதனால் கடவுளைக் கூட வெல்ல முடியும், ஆனால் காமத்தை வெல்ல முடியாது என்பதே அது..." என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG