அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஏப்ரல், 2010

உலர் உணவுப் பொருட்களை விற்றுப் பணமாக்கும் அகதிகள் : வவு. தடுப்பு முகாமில் அவலம் _

வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உலர் உணவு பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் பரிதாப நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள், பணவசதி இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்
உலருணவுப் பொருட்களில் அரிசி, மா போன்றவற்றை மிகவும் குறைந்த விலைக்கு வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விற்பனை செய்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
1 கிலோ மா கடைகளில் 75 முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வறுமையின் காரணமாக 1 கிலோ 30 முதல் 45 ரூபா வரை அவர்கள் விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில்,
"எங்களிடம் பணம் இல்லை. உணவுப்பொருட்களை மட்டுமே தருகின்றனர். அவசரத் தேவைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் எமக்குப் பணம் தேவை. அதனால்தான் இவற்றை விற்று வருகின்றோம்" என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG