எதிர்வரும் 6 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கட் போட்டித்தொடர் ஆட்டம் ஒன்றில் இலங்கையின் வீரர் சனத் ஜெயசூரிய பங்கேற்க கூடாது என புதிய தமிழகம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் கிருஸ்ணசாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மும்பாய் இந்தியன் அணிக்காக விளையாடும் சனத் ஜெயசூரிய, இலங்கையின் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
மஹிந்த ராஜபக்ச, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் என்ற வகையில் அவரின் கட்சியில் இணைந்து போட்டியிடும் ஒருவருக்கு தமிழகத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என கிருஸ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமது எச்சரிக்கையை மீறி சனத் ஜெயசூரிய சென்னை போட்டியில் விளையாடினால் தாம் மைதானத்தில் போராட்டத்தை நடத்தப்போவதாக கிருஸ்ணசாமி தெரிவித்துள்ளார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 20 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக