
வடக்கிலிருந்து மீட்கப்பட்ட ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன பாதுகாப்பாக பேணப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது கைவிடப்பட்ட சொத்துக்கள் பாதுகாப்பாக பேணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா வங்கி ஊழியர்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வங்கி காப்புப் பெட்டகங்களில் பேணப்பட்ட பாரியளவு தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன மிகவும் நேர்த்தியான முறையில் பாதுகாக்கப்படுவதாகவும் குறித்த பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் எதிர்காலத்தில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2 கருத்துகள்:
அது சரி மீட்கப்பட்ட நகைகள் எல்லாம் என்ன மியூசியத்திலை பாதுகாப்பாக வைக்கப் போகீனையோ இல்லையெண்டால் பொது மக்களிடம் திருப்பிக் கொடுக்கப் போகீனமோ?
@கமல் அருமை நண்பா. பொங்கட்டும் உன் தீ. .... பொறுத்திருந்து பார்ப்போம். பார்ப்போம் நண்பா பொங்கினார் காடு சென்ற கதை எங்கள் வரலாறு எது எப்படியோ உங்கள் வரவு நல வரவு நன்றி
கருத்துரையிடுக