அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 23 மார்ச், 2010

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மோதலில் ஒருவர் பலி:சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

நல்லூர் செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த மாணவன் இரண்டு நாட்களின் பின் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வேளை, அங்கு வந்த சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ்தோபர் எனும் மாணவரைத் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த கிறிஸ்தோபர் பிறேமன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் உயிரிழந்தார்.
நல்லூர் வைமன் வீதியைச் சேர்ந்த 20 வயதான கிறிஸ்தோபர் தலையில் பலமான அடிபட்டதினால் இரத்தம் கண்டிய நிலையிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து கோப்பாய் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஐவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்தனர். இவர்களில் மூவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG