அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 19 மார்ச், 2010

பான் கீ மூனுடன் அரசாங்கம் எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை : வெளிவிவார அமைச்சர்


ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என வெளிவிவார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பான் கீ மூனின் தீர்மானம் இலங்கைக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில், ஐக்கிய நாடுகளின் ஏழாவது பிரகடனத்தின் அடிப்படையில் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றின் ஒப்புதல் இன்றி பான் கீ மூன் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG