அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 30 மார்ச், 2010

கமல் படத்தில் விசாலி கண்ணதாசன்!

கமல் ஹாஸனின் யாவரும் கேளிர் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார்.
முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவாகும் படம் இது. நகைச்சுவை ததும்பும் படமாக உருவாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க கவியரசு கண்ணதாசன் மகள் விசாலியை ஒப்பந்தம் செய்துள்ளாராம் கேஎஸ் ரவிக்குமார். அதுவும் நகைச்சுவைப் பாத்திரமாம். இந்த வேடத்தை விசாலி செய்தால் நன்றாக இருக்கும் என கமல் விரும்பினாராம்.
விசாலி ஏற்கெனவே வானமே எல்லை படத்தில் நடித்தவர். சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இடையில் திரையுலகில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தவர், நெடு நாளைக்குப் பிறகு பெரிய திரையில் பெரிய வாய்ப்புடன் வருகிறார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG