இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதென அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.
சர்வதேசத்தின் தலையீட்டை நாடுவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களெனவும் அவர் கூறினார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ் ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்ளக சுயாட்சியை வலியுறுத்தி எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது.
தமிழ் கடும் போக்காளர்களாக இருக்கும் இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றார்.
உண்மையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு பங்குபற்றவில்லை. ஏனென்றால் புலிகள் அவர்களைத் தடுத்தனர். ஆனால் புலிகள் இப்போது அரங்கில் இல்லை. இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுதந்திரமான அரசியல் கட்சியாக தேர்தலில் நிற்கிறது.
இது தமிழ் மக்களின் அபிலாஷை களை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.அதேநேரம் அரசியல் தீர்வு யோசனையை அவர்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு முன்வைக்கலாம் என்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 14 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக